இடைக்கால பல்லவ மன்னன் | மூன்றாம் ஸ்கந்தவர்மன் | Middle Pallavas | Skanda Varman III
தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம் ! இடைக்கால பல்லவர்கள் மூன்றாம் ஸ்கந்தவர்மன் ( கி . பி .400 - 436) பல பசுக்கள், பொன், நிலத்தை தானமாகக் கொடுத்தவன் என்றும், முழு தக்காணத்தையும், மூன்று கடல்களின் கரைகளையும் இவன் வென்றதாகவும் இவனது மகன் இரண்டாம் சிம்மவர்மனின் வேசந்த, சகரிப்பட்டினம் செப்பேடுகள் கூறுகின்றன. இவன் 'நூறு யுத்தங்கள் செய்தவன்' என்றும் புகழப்படுகிறான். இவனது ஆட்சிக் காலத்தில் கதம்ப ராஜ்யத்தில் வாரிசுப் போர் நடந்தது. கதம்ப அரசன் காகுஸ்தவர்மனின் ஒரு மனைவி மூலம் பிறந்தவன் சாந்திவர்மன். அடுத்த மகன் கிருஷ்ணவர்மன் மற்றொரு மனைவி மூலம் பிறந்தவன். இந்த இரண்டு மகன்களும் வாரிசுப் போரில் இறங்கினர். ஒருவன் வனவாசியைத் தலைநகராகவும், இன்னொருவன் திரிபர்வதத்தை தலைநகராகவும் கொண்டு ஆள ஆரம்பித்தனர். பல்லவ அரசன் மூன்றாம் ஸ்கந்தவர்மன் கதம்ப அரசியலில் புகுந்தான். திரிபர்வதத்தை ஆண்ட முதலாம் கிருஷ்ணவர்மனை ஆதரிக்க ஆரம்பித்தான். தனது நாட்டிற்கு அருகிலுள்ள கதம்ப நாட்டில் இரு போட்டி அரசர்களை உருவாக்கியதில் அவர்களும் அவர்களுது வாரிசுகளும் ஒரு நூற்றாண்டு காலம் ஒருவருக்கொரு...