Posts

Showing posts with the label KALABHRAS

இடைக்கால பல்லவ மன்னன் | மூன்றாம் ஸ்கந்தவர்மன் | Middle Pallavas | Skanda Varman III

Image
தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம் ! இடைக்கால பல்லவர்கள் மூன்றாம் ஸ்கந்தவர்மன் ( கி . பி .400 - 436) பல பசுக்கள், பொன், நிலத்தை தானமாகக் கொடுத்தவன் என்றும், முழு தக்காணத்தையும், மூன்று கடல்களின் கரைகளையும் இவன் வென்றதாகவும் இவனது மகன் இரண்டாம் சிம்மவர்மனின் வேசந்த, சகரிப்பட்டினம் செப்பேடுகள் கூறுகின்றன. இவன் 'நூறு யுத்தங்கள் செய்தவன்' என்றும் புகழப்படுகிறான்.  இவனது ஆட்சிக் காலத்தில் கதம்ப ராஜ்யத்தில் வாரிசுப் போர் நடந்தது. கதம்ப அரசன் காகுஸ்தவர்மனின் ஒரு மனைவி மூலம் பிறந்தவன் சாந்திவர்மன். அடுத்த மகன் கிருஷ்ணவர்மன் மற்றொரு மனைவி மூலம் பிறந்தவன்.  இந்த இரண்டு மகன்களும் வாரிசுப் போரில் இறங்கினர். ஒருவன் வனவாசியைத் தலைநகராகவும், இன்னொருவன் திரிபர்வதத்தை தலைநகராகவும் கொண்டு ஆள ஆரம்பித்தனர்.  பல்லவ அரசன் மூன்றாம் ஸ்கந்தவர்மன் கதம்ப அரசியலில் புகுந்தான். திரிபர்வதத்தை ஆண்ட முதலாம் கிருஷ்ணவர்மனை ஆதரிக்க ஆரம்பித்தான். தனது நாட்டிற்கு அருகிலுள்ள கதம்ப நாட்டில் இரு போட்டி அரசர்களை உருவாக்கியதில் அவர்களும் அவர்களுது வாரிசுகளும் ஒரு நூற்றாண்டு காலம் ஒருவருக்கொரு...

KALABHRA DYNASTY | களப்பிரர் காலம்

Image
சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் சிறப்பாக தமிழகத்தை ஆண்டுவந்துள்ளனர். திடீரென்று மூன்று அரசுகளும்  300 ஆண்டுகள்   காணாமல் போனது.  அதற்கு காரணம் யார்? தமிழகத்தை ஆண்ட அரசர்களை  சங்கம் மருவிய காலத்திற்க்கு முன் ஆண்ட அரசர்கள் என்றும், சங்கம் மருவிய காலத்திற்கு பின் ஆண்ட அரசர்கள் என்றும்  இருவகைபடுத்துகிறார்கள். அப்படியென்றால் சங்கம் மருவிய காலத்தை   ஆண்ட வம்சம் எது? கி.பி. 3 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து கி.பி. 6 ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை  தமிழகத்தை ஏன் இருண்ட காலம் என்றழைக்கிறார்கள்? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை  களப்பிரர்கள் .  களப்பிரர்களை பற்றி அறிய ஆர்வமாக உள்ளதா? தொடர்ந்து படியுங்கள். களப்பிரர் காலம் களப்பிரர்களை பற்றி அறிய திடமான சான்றுகள் எதுவும் இல்லை. களப்பிரர்களால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ இல்லை. இவர்களை பற்றி அறிய சில பல்லவ மற்றும் பாண்டிய செப்பேடுகளும், சில இலக்கிய சான்றுகளும் உதவியாக உள்ளன. ஆனால் இந்த செப்பேட்டையும்,  இலக்கிய சான்றுகளையும் வைத்து களப்பிரர்களின் முழு வரலாற்றை அறிய...