KALABHRA DYNASTY | களப்பிரர் காலம்

சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் சிறப்பாக தமிழகத்தை ஆண்டுவந்துள்ளனர். திடீரென்று மூன்று அரசுகளும் 300 ஆண்டுகள் காணாமல் போனது. அதற்கு காரணம் யார்? தமிழகத்தை ஆண்ட அரசர்களை சங்கம் மருவிய காலத்திற்க்கு முன் ஆண்ட அரசர்கள் என்றும், சங்கம் மருவிய காலத்திற்கு பின் ஆண்ட அரசர்கள் என்றும் இருவகைபடுத்துகிறார்கள். அப்படியென்றால் சங்கம் மருவிய காலத்தை ஆண்ட வம்சம் எது? கி.பி. 3 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து கி.பி. 6 ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை தமிழகத்தை ஏன் இருண்ட காலம் என்றழைக்கிறார்கள்? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை களப்பிரர்கள் . களப்பிரர்களை பற்றி அறிய ஆர்வமாக உள்ளதா? தொடர்ந்து படியுங்கள். களப்பிரர் காலம் களப்பிரர்களை பற்றி அறிய திடமான சான்றுகள் எதுவும் இல்லை. களப்பிரர்களால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ இல்லை. இவர்களை பற்றி அறிய சில பல்லவ மற்றும் பாண்டிய செப்பேடுகளும், சில இலக்கிய சான்றுகளும் உதவியாக உள்ளன. ஆனால் இந்த செப்பேட்டையும், இலக்கிய சான்றுகளையும் வைத்து களப்பிரர்களின் முழு வரலாற்றை அறிய...