சோழர்களின் கோவில் | தஞ்சைப் பெருவுடையார் கோயில்| CHOZHA TEMPLE| BIG TEMPLE| UNESCO SITE|

தஞ்சைப் பெருவுடையார் கோயில் சோழர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கலை நயத்தை அறிய அவர்கள் கட்டிய கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. சோழர்களில் புகழ்மிக்க இடைக்கால அரசன் அருள்மொழி வர்மன் என்றழைக்கப்படும் முதலாம் இராஜராஜ சோழனின் கலை நயத்தை பற்றி அறிய அவர் காலத்தில் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோவிலின் வரலாறு கி.பி 985ல், சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்ட ராஜராஜன், தன் 25 -ம் ஆட்சியாண்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோயிலைக் கட்டியெழுப்பினான். ராஜராஜன் காலத்தில் இக்கோயில், ` ராஜராஜேஸ்வரம் ’ என்று அழைக்கப்பட்டது. அதன்பிறகு, பெருவுடையார் கோயில் , பெரியகோயில் , 17-ம் மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது இக்கோவில் பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில். பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்...