முற்கால முதல் மன்னன் | சிம்மவர்மன் | Early Pallavas | Simhavarman

தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம்!


பல்லவர்களை மூன்று கால பல்லவர்களாக  வகைப்படுத்தலாம்:
  • முற்கால பல்லவர்கள் 
  • இடைக்கால பல்லவர்கள் 
  • பிற்கால பல்லவர்கள்

முதலில் முற்கால பல்லவர்களை  பற்றி  காண்போம் 

பல்லவர்களின் ஆரம்பகால வரலாற்றை முதன்முதலாகத் தெரிவிப்பது வேலூர்ப்பாளையம் செப்பேடுதான் (கி.பி.852) இச்செப்பேட்டில்தான் வீர்க்கூச்சன் என்பவன் நாகராஜன் மகளை மணந்து அரசாளும் உரிமையை பெற்றான் என்று சொல்லப்பட்டுள்ளது. இவனது மகன் ஸ்கந்த சிஷ்யன் காஞ்சியிலிருந்த கல்விக்கூடத்தை சத்யசேனனிடமிருந்து கைப்பற்றிருக்கிறான். பல்லவர்களின் மூன்றாம் அரசனான குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றி நிலைப்படுத்திக் கொண்டான்.

இவன் மகன் புத்தவர்மன், திருச்சி, தஞ்சை பகுதியில் ஆட்சியிலிருந்த முத்தரையர், சோழர்களுக்கு வடக்கிலிருந்து வரும் தீ போல இருந்து பல்லவ ராஜ்யத்தை புத்தவர்மன் தஞ்சாவூர் வரை விரிவுபடுத்தியிருக்கிறான்.

முதலாம் சிம்மவர்மன் (முற்காலம்) (கி.பி.295-330)

சரித்திரம் ஏற்றுக்கொண்ட பல்லவ அரசர்களில் முதல்வன். குண்டூர் மாவட்டம் பழநாடு தாலுகா மஞ்சிக்கல்லில் கிடைத்துள்ள கி.பி. 295-ஆம் ஆண்டு கல்வெட்டு இவனை பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவன் என்றும் பல்லவர் வழி வந்தவன் என்றும் கூறுகிறது. இவன், கிருஷ்ணா, குண்டூர் பகுதியில் ஆட்சி செய்த இட்சுவாகு அரசர்களின் விஜயபுரியையும் அங்கிருந்த புத்த விகாரங்களையும் அழித்ததாக கூறிக்கொள்கிறான். இவனது ஆட்சி காஞ்சிபுரம், நெல்லூர், கிருஷ்ணா, குண்டூர், பெல்லாரிப் பகுதிகளை உள்ளடக்கியது. இவனது ஆட்சிக்காலத்தை அறிய போதிய சான்றுகள் இல்லை.

சிம்மவர்மனின் மகன் சிவஸ்கந்தவர்மன் இரண்டாம் முற்கால பல்லவ மன்னன் ஆவார். அவரை பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.


! நன்றி !

Comments

Popular posts from this blog

Todas | Nilgiri Tribes

Pallava art and architecture | பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை | பல்லவர்களின் கோவில்கள்- Part 1