இடைக்கால பல்லவ மன்னன் | முதலாம் குமாரவிஷ்ணு | Middle Pallavas | Kumaravisnu I
தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம்!
முதலாம் குமாரவிஷ்ணு (கி. பி. 350 - 367)
முதலாம் சிவஸ்கந்தவர்மனைத் தொடர்ந்து அவனது மூத்த மகன் புத்தவர்மன் அரசானாகவில்லை எனத் தெரிகிறது.
ஏனென்றால்,
புத்தவர்மனின் மனைவி சாருதேவி தன்னை யுவமகாராஜாவின் மனைவி என்றும் புத்தயன்குராவின் தாய் என்றும் அறிவித்து குணபதேய செப்பேட்டை அளித்துள்ளாள்.
இந்த செப்பேட்டில் சொல்லப்பட்ட தானம் அரசனின் ஆட்சியாண்டில் வழங்கப்பட்டது என்ற தகவல் இல்லை.
தனது,
புகழையும்,
ஆயுளையும் அதிகரிப்பதற்காக தானம் செய்ததாக சொல்வதிலிருந்து இவள் கணவன் அரசனாக இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆகவே முதலாம் சிவஸ்கந்தவர்மனின் இரண்டாம் மகன் முதலாம் குமாரவிஷ்ணு பதவிக்கு வந்தான்.
இவனது பேரனின் மகனான மூன்றாம் ஸ்கந்தவர்மனின் ஓங்கோடுச் செப்பேடு,
இவனை அஸ்வமேத யாகம் செய்தவன் என்று புகழ்கிறது.
முதலாம் குமாரவிஷ்ணு ஆட்சி காலத்திலேதான் காஞ்சி சோழர்கள் ஆட்சியிலிருந்து பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழ் வந்தது என்ற கருத்தும் நிலவுகிறது. இவரை பற்றிய தகவல்கள் போதிய அளவில் இல்லை.
என்னுடைய அடுத்த பகுதியில் இடைக்கால பல்லவ மன்னனா இரண்டாம் ஸ்கந்தவர்மனை பற்றி காண்போம்.
! நன்றி !
Comments
Post a Comment