Posts

Showing posts with the label chozha temple

இடைக்கால பல்லவ மன்னன் | மூன்றாம் ஸ்கந்தவர்மன் | Middle Pallavas | Skanda Varman III

Image
தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம் ! இடைக்கால பல்லவர்கள் மூன்றாம் ஸ்கந்தவர்மன் ( கி . பி .400 - 436) பல பசுக்கள், பொன், நிலத்தை தானமாகக் கொடுத்தவன் என்றும், முழு தக்காணத்தையும், மூன்று கடல்களின் கரைகளையும் இவன் வென்றதாகவும் இவனது மகன் இரண்டாம் சிம்மவர்மனின் வேசந்த, சகரிப்பட்டினம் செப்பேடுகள் கூறுகின்றன. இவன் 'நூறு யுத்தங்கள் செய்தவன்' என்றும் புகழப்படுகிறான்.  இவனது ஆட்சிக் காலத்தில் கதம்ப ராஜ்யத்தில் வாரிசுப் போர் நடந்தது. கதம்ப அரசன் காகுஸ்தவர்மனின் ஒரு மனைவி மூலம் பிறந்தவன் சாந்திவர்மன். அடுத்த மகன் கிருஷ்ணவர்மன் மற்றொரு மனைவி மூலம் பிறந்தவன்.  இந்த இரண்டு மகன்களும் வாரிசுப் போரில் இறங்கினர். ஒருவன் வனவாசியைத் தலைநகராகவும், இன்னொருவன் திரிபர்வதத்தை தலைநகராகவும் கொண்டு ஆள ஆரம்பித்தனர்.  பல்லவ அரசன் மூன்றாம் ஸ்கந்தவர்மன் கதம்ப அரசியலில் புகுந்தான். திரிபர்வதத்தை ஆண்ட முதலாம் கிருஷ்ணவர்மனை ஆதரிக்க ஆரம்பித்தான். தனது நாட்டிற்கு அருகிலுள்ள கதம்ப நாட்டில் இரு போட்டி அரசர்களை உருவாக்கியதில் அவர்களும் அவர்களுது வாரிசுகளும் ஒரு நூற்றாண்டு காலம் ஒருவருக்கொரு...

சோழர்களின் கோவில் | தஞ்சைப் பெருவுடையார் கோயில்| CHOZHA TEMPLE| BIG TEMPLE| UNESCO SITE|

Image
 தஞ்சைப் பெருவுடையார் கோயில் சோழர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கலை நயத்தை அறிய அவர்கள் கட்டிய கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.  சோழர்களில் புகழ்மிக்க இடைக்கால அரசன் அருள்மொழி வர்மன் என்றழைக்கப்படும் முதலாம் இராஜராஜ சோழனின் கலை நயத்தை பற்றி அறிய அவர் காலத்தில் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோவிலின் வரலாறு கி.பி 985ல், சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்ட ராஜராஜன், தன் 25 -ம் ஆட்சியாண்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோயிலைக் கட்டியெழுப்பினான். ராஜராஜன் காலத்தில் இக்கோயில், ` ராஜராஜேஸ்வரம் ’ என்று அழைக்கப்பட்டது. அதன்பிறகு, பெருவுடையார் கோயில் , பெரியகோயில் , 17-ம் மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது இக்கோவில்  பிரகதீஸ்வரர் ஆலயம் என்று  அழைக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில். பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்...

சோழர்களின் கோவில் | ஐராவதேஸ்வரர் கோவில்| CHOZHA TEMPLE| AIRAVATHESHWARAR TEMPLE| UNESCO SITE|

Image
ஐராவதேஸ்வரர்  கோவில் சோழர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கலை நயத்தை   அறிய அவர்கள் கட்டிய கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.  அதில் பிற்கால அரசனான இரண்டாம் ராஜராஜ சோழனை பற்றி அறிய ஐராவதேஸ்வரர் கோவில் உதவியாக உள்ளது. கோவிலின் வரலாறு   ஐராவதேஸ்வரர் கோவில் 12-ம்  நூற்றாண்டில் பிற்கால சோழன் இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அருகில்  உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ளது.  அழியாத சோழர் பெருங்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.   கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும். கோவிலின் வேறு பெயர்கள்   ஐராவதேஸ்வரர்  ராஜராஜேஸ்வரம்  தாராசுரம்  பெயர் காரணங்கள் மகாலட்சுமி ஒரு முறை துர்வாச முனிவருக்கு ஒரு மாலையை பரிசாக அளித்தார். அதனை முனிவர் இந்திரனுக்கு கொடுத்தார். இந்திரனும் அந்த மாலையை வாங்கி தன் வாகனமான  ஐராவதம் ...