Posts

What is the Aries Constellation | Location in the sky | Mythology | Deep sky objects

Image
What is the Aries constellation? The Aries constellation is one of the 88 modern constellations recognized by the International Astronomical Union (IAU). Aries constellation is one of the 12 constellations of the zodiac. The name "Aries" comes from the Latin word for "ram," and the constellation is often depicted as a ram or a sheep in various cultural traditions. What are the stars in the Aries constellation? The Aries constellation contains several stars, but the five brightest stars that form the distinctive "V" shape of the ram's head are: Hamal (Alpha Arietis): Hamal is the brightest star in Aries and has an apparent magnitude of +2.0. It is an orange giant star located approximately 66 light-years from Earth. Sheratan (Beta Arietis): Sheratan is the second brightest star in Aries with an apparent magnitude of +2.6. It is a binary star system located approximately 60 light-years from Earth. Mesarthim (Gamma Arietis): Mesarthim is a binary...

இடைக்கால பல்லவ மன்னன் | மூன்றாம் ஸ்கந்தவர்மன் | Middle Pallavas | Skanda Varman III

Image
தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம் ! இடைக்கால பல்லவர்கள் மூன்றாம் ஸ்கந்தவர்மன் ( கி . பி .400 - 436) பல பசுக்கள், பொன், நிலத்தை தானமாகக் கொடுத்தவன் என்றும், முழு தக்காணத்தையும், மூன்று கடல்களின் கரைகளையும் இவன் வென்றதாகவும் இவனது மகன் இரண்டாம் சிம்மவர்மனின் வேசந்த, சகரிப்பட்டினம் செப்பேடுகள் கூறுகின்றன. இவன் 'நூறு யுத்தங்கள் செய்தவன்' என்றும் புகழப்படுகிறான்.  இவனது ஆட்சிக் காலத்தில் கதம்ப ராஜ்யத்தில் வாரிசுப் போர் நடந்தது. கதம்ப அரசன் காகுஸ்தவர்மனின் ஒரு மனைவி மூலம் பிறந்தவன் சாந்திவர்மன். அடுத்த மகன் கிருஷ்ணவர்மன் மற்றொரு மனைவி மூலம் பிறந்தவன்.  இந்த இரண்டு மகன்களும் வாரிசுப் போரில் இறங்கினர். ஒருவன் வனவாசியைத் தலைநகராகவும், இன்னொருவன் திரிபர்வதத்தை தலைநகராகவும் கொண்டு ஆள ஆரம்பித்தனர்.  பல்லவ அரசன் மூன்றாம் ஸ்கந்தவர்மன் கதம்ப அரசியலில் புகுந்தான். திரிபர்வதத்தை ஆண்ட முதலாம் கிருஷ்ணவர்மனை ஆதரிக்க ஆரம்பித்தான். தனது நாட்டிற்கு அருகிலுள்ள கதம்ப நாட்டில் இரு போட்டி அரசர்களை உருவாக்கியதில் அவர்களும் அவர்களுது வாரிசுகளும் ஒரு நூற்றாண்டு காலம் ஒருவருக்கொரு...

இடைக்கால பல்லவ மன்னன் | இரண்டாம் ஸ்கந்தவர்மன் | Middle Pallavas | Skanda Varman II

Image
     தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம் ! இடைக்கால பல்லவர்கள் இரண்டாம் ஸ்கந்தவர்மன்  ( கி . பி . 370 - 385) இவன் முதலாம் குமாரவிஷ்ணுவிற்கு அடுத்து வந்த அரசன் என்று ஓங்கோடு , உருவப்பள்ளி ,  நெடுங்கராய , சகரிப் பட்டினம் செப்பேடுகள் சொல்கின்றன . இவன் தன்னை ஸ்சுவபாகு வராஜ்ஜித்ரோஜித்தா ( தனது சொந்த பலத்தால் அரசை சம்பாதித்தவன் ) என்று   கூறிக்கொள்கிறான் . இவனுக்கு பின் வீரவர்மன் ஆட்சி செய்ததாக ஓங்கோடு , உருவப்பள்ளி , நெடுங்கராய , வேசந்த ,  சகரிப்பட்டினம் , பீகிர , மாங்களூர் , விழவெட்டிச் செப்பேடுகள் சொல்கின்றன . இவரை பற்றிய   தகவல்கள் போதிய அளவில் இல்லை . என்னுடைய அடுத்த பகுதியில் இடைக்கால பல்லவ மன்னனா மூன்றாம்   ஸ்கந்தவர்மனை   பற்றி காண்போம் . ! நன்றி !

இடைக்கால பல்லவ மன்னன் | முதலாம் குமாரவிஷ்ணு | Middle Pallavas | Kumaravisnu I

Image
  தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம்! இடைக்கால பல்லவர்கள் முதலாம் குமாரவிஷ்ணு (கி. பி. 350 - 367) முதலாம் சிவஸ்கந்தவர்மனைத் தொடர்ந்து அவனது மூத்த மகன் புத்தவர்மன் அரசானாகவில்லை எனத் தெரிகிறது . ஏனென்றால் , புத்தவர்மனின் மனைவி சாருதேவி தன்னை யுவமகாராஜாவின் மனைவி என்றும் புத்தயன்குராவின் தாய் என்றும் அறிவித்து குணபதேய செப்பேட்டை அளித்துள்ளாள் . இந்த செப்பேட்டில் சொல்லப்பட்ட தானம் அரசனின்   ஆட்சியாண்டில் வழங்கப்பட்டது என்ற தகவல் இல்லை . தனது , புகழையும் , ஆயுளையும் அதிகரிப்பதற்காக தானம் செய்ததாக   சொல்வதிலிருந்து இவள் கணவன் அரசனாக இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது . ஆகவே முதலாம் சிவஸ்கந்தவர்மனின் இரண்டாம் மகன் முதலாம் குமாரவிஷ்ணு பதவிக்கு வந்தான் . இவனது பேரனின் மகனான மூன்றாம் ஸ்கந்தவர்மனின் ஓங்கோடுச் செப்பேடு , இவனை அஸ்வமேத யாகம் செய்தவன் என்று புகழ்கிறது . முதலாம் குமாரவிஷ்ணு ஆட்சி காலத்திலேதான் காஞ்சி சோழர்கள் ஆட்சியிலிருந்து பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழ் வந்தது என்ற கருத்தும் நிலவுகிற...

முற்கால இரண்டாம் மன்னன் | முதலாம் சிவஸ்கந்தவர்மன் | Early Pallavas | Shivaskandavarman I

Image
தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம்! இன்று நாம் தெரிந்து கொள்ள போகும் மன்னன் முற்கால பல்லவர்களில் இரண்டாம் மன்னனா சிவஸ்கந்தவர்மன் . முதல் மன்னனா சிம்மவர்மனை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் - ஐ கிளிக் செய்யவும் .👉 https://blogwriterdeepa.blogspot.com/2022/08/blog-post.html சிவஸ்கந்தவர்மன்   ( முற்காலம் )   ( கி . பி . 330-350) சிவஸ்கந்தவர்மன்   என்பவன் முற்காலப் பல்லவர் மன்னர்களுள் அறியப்படும் இரண்டாம் பல்லவ மன்னனாவான் . சிம்மவர்மனின் மகன் . யுவமகாராஜனாயிருக்கும்போதே தந்தைக்கு உதவியாக போர்களில் கலந்து கொண்டவன் என மயிதவோலுச் செப்பேடு ( கி . பி .305) சொல்கிறது . இந்த செப்பேடு வழங்கப்பட்ட 25 ஆண்டுகள் கழித்துதான் சிவஸ்கந்தவர்மன் அரச பதவிக்கு வந்திருக்கிறான் .  இவன் தன் தந்தையின் காலத்தில் இளவரசனாகக் காஞ்சியில் இருந்து , பல்லாரி ஜில்லாவில் உள்ள ‘ விரிபரம் ’ என்ற கிராமத்தை மறையவர் இருவர்க்குத் தானமாக விட்டான் . இச்செய்தியைக் கூறுவதே ‘ மயிதவோலுப் பட்டயம் ’ என்ற முதல் பிராக்ருதப் பட்டயமாகும்....