முற்கால இரண்டாம் மன்னன் | முதலாம் சிவஸ்கந்தவர்மன் | Early Pallavas | Shivaskandavarman I

தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம்!


இன்று நாம் தெரிந்து கொள்ள போகும் மன்னன் முற்கால பல்லவர்களில் இரண்டாம் மன்னனா சிவஸ்கந்தவர்மன்.

முதல் மன்னனா சிம்மவர்மனை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்- கிளிக் செய்யவும்.👉https://blogwriterdeepa.blogspot.com/2022/08/blog-post.html

சிவஸ்கந்தவர்மன் (முற்காலம்) (கி.பி. 330-350)

சிவஸ்கந்தவர்மன் என்பவன் முற்காலப் பல்லவர் மன்னர்களுள் அறியப்படும் இரண்டாம் பல்லவ மன்னனாவான். சிம்மவர்மனின் மகன். யுவமகாராஜனாயிருக்கும்போதே தந்தைக்கு உதவியாக போர்களில் கலந்து கொண்டவன் என மயிதவோலுச் செப்பேடு (கி.பி.305) சொல்கிறது. இந்த செப்பேடு வழங்கப்பட்ட 25 ஆண்டுகள் கழித்துதான் சிவஸ்கந்தவர்மன் அரச பதவிக்கு வந்திருக்கிறான்இவன் தன் தந்தையின் காலத்தில் இளவரசனாகக் காஞ்சியில் இருந்து, பல்லாரி ஜில்லாவில் உள்ளவிரிபரம்என்ற கிராமத்தை மறையவர் இருவர்க்குத் தானமாக விட்டான். இச்செய்தியைக் கூறுவதேமயிதவோலுப் பட்டயம்என்ற முதல் பிராக்ருதப் பட்டயமாகும். இவன் இளவரசனாயிருக்கும்போதே நிலத்தானம் வழங்கியுள்ளான்  என்பதால் அரசனுக்கு இணையாகக் கருதப்பட்டான் என தெரிகிறது.

இவனது ஹிரஹடஹள்ளிச் செப்பேடு இவனை தர்ம மகாராஜாதிராஜன் என அழைக்கிறதுஇவன் காலத்தில் இட்சுவாகு  வம்ச ஆட்சியை முழுமையாக ஒழித்துவிட்டதால் அசுவமேத, வாஜ்பேய, அக்னிஸ்டோம யாகங்களை இவன் செய்திருக்கிறான் என்று இப்பட்டயம் கூறுகின்றது. 

இவற்றுள் அக்னிஸ்டோமம் என்பது வசந்த காலத்தில் பலநாள் தொடர்ந்து செய்யப்படும் வேள்வியாகும். வாஜ்பேயம் என்பது உயர்ந்த அரசநிலை, எய்தற்பொருட்டுச் செய்யப்படும் வேள்வியாகும். அசுவமேதம் என்பது பேரரசன் என்பதைப் பிற அரசர் பலரும் ஒப்புக்கொண்டமைக்கு அறிகுறியாகச் செய்யப்படும் பெரு வேள்வியாகும். சிவஸ்கந்தவர்மன் இவை மூன்றையும் வெற்றிகரமாகச் செய்து, அறநெறி பிறழாமல் நாட்டை ஆண்டு, தானும் நேரிய வாழ்க்கை வாழ்ந்தமையாற்போலும் தன்னைத்தர்ம மகாராஜாதிராஜன்என்று அழைத்துக் கொண்டான்இவனுக்கு பின் வந்த அரசர்கள் பற்றி சரியான தகவல்கள் இல்லை.

என்னுடைய அடுத்த பகுதியில் இடைக்கால பல்லவ மன்னனா முதலாம் குமரவிஷ்ணுவை பற்றி காண்போம்.


நன்றி !



Comments

Popular posts from this blog

Todas | Nilgiri Tribes

Pallava art and architecture | பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை | பல்லவர்களின் கோவில்கள்- Part 1

முற்கால முதல் மன்னன் | சிம்மவர்மன் | Early Pallavas | Simhavarman