இடைக்கால பல்லவ மன்னன் | முதலாம் குமாரவிஷ்ணு | Middle Pallavas | Kumaravisnu I
தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம்! இடைக்கால பல்லவர்கள் முதலாம் குமாரவிஷ்ணு (கி. பி. 350 - 367) முதலாம் சிவஸ்கந்தவர்மனைத் தொடர்ந்து அவனது மூத்த மகன் புத்தவர்மன் அரசானாகவில்லை எனத் தெரிகிறது . ஏனென்றால் , புத்தவர்மனின் மனைவி சாருதேவி தன்னை யுவமகாராஜாவின் மனைவி என்றும் புத்தயன்குராவின் தாய் என்றும் அறிவித்து குணபதேய செப்பேட்டை அளித்துள்ளாள் . இந்த செப்பேட்டில் சொல்லப்பட்ட தானம் அரசனின் ஆட்சியாண்டில் வழங்கப்பட்டது என்ற தகவல் இல்லை . தனது , புகழையும் , ஆயுளையும் அதிகரிப்பதற்காக தானம் செய்ததாக சொல்வதிலிருந்து இவள் கணவன் அரசனாக இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது . ஆகவே முதலாம் சிவஸ்கந்தவர்மனின் இரண்டாம் மகன் முதலாம் குமாரவிஷ்ணு பதவிக்கு வந்தான் . இவனது பேரனின் மகனான மூன்றாம் ஸ்கந்தவர்மனின் ஓங்கோடுச் செப்பேடு , இவனை அஸ்வமேத யாகம் செய்தவன் என்று புகழ்கிறது . முதலாம் குமாரவிஷ்ணு ஆட்சி காலத்திலேதான் காஞ்சி சோழர்கள் ஆட்சியிலிருந்து பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழ் வந்தது என்ற கருத்தும் நிலவுகிற...